கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 நாட்களில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஓணத்தின்போது விற்பனையான ரூ.776 கோடியை விட ரூ.50 கோடி அதிகம்.
இந்த ஆண்டு 10 நாட்கள் ஓணம் பண்டிகை சிறப்பாக கேரள மக்களால் கொண்டாட்டப்பட்ட நிலையில் இந்த ஓணம் பண்டிகையை ஒட்டி கேரளாவில் 10 நாட்களில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ,50 கோடி அதிகம்.
கேரளாவில் ஓணம் பண்டிகை சமயத்தில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கமான நிகழ்வாகவே உள்ளது. எனினும், இந்த ஆண்டு விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விற்பனை குறித்த விரிவான புள்ளிவிவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran