தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம் ‘இட்லி கடை’, மேலும், அவர் நடிக்கும் 52வது திரைப்படமாக இப்படம் இருக்கிறது. பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு முக்கிய பங்காக, அருண் விஜய் வில்லனாக நடிக்க, படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது.இதில் ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் ஹிட்டாகி இருக்கும் நிலையில், தனுஷ் எழுதி பாடிய ‘எஞ்சாமி தந்தானே’ பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இதில், அருண் விஜய் ‘அஷ்வின்’ கதாபாத்திரமாகவும், இன்று வெளியான புதிய போஸ்டரில் சத்யராஜ் ‘விஷ்ணு வர்தன்’ கதாபாத்திரமாகவும் நடிப்பது அறிவிக்கப்பட்டுள்ளது.