தமிழ் திரைப்பட ரசிகர்களுக்காக வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பை நடிகர் தனுஷ் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், விஜயா சதீஷ் தயாரிக்கும் இந்தப்படம் “மனிதன் தெய்வமாகலாம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.இதில் கிராமத்தில் நடக்கும் சோகம், அதை மீட்டெடுக்கும் நாயகனின் போராட்டம், அவனை தெய்வமாக உயர்த்தும் கதையே படத்தின் மையக்கரு.
இப்படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கலைஞர்களில் ரவி வர்மா கே (ஒளிப்பதிவு), தீபக் எஸ் (தொகுப்பு), ஏ.கே. பிரியன் (இசை), பாக்கியராஜ் (கலை இயக்கம்) உள்ளிட்டோர் பணியாற்றியுள்ளனர்.
இதுகுறித்து, தயாரிப்பாளர் விஜயா சதீஷ் தெரிவித்ததாவது,"படத்தின் தலைப்பை வெளியிட்ட தனுஷ் சார் அவர்களுக்கு நன்றி. நம்பிக்கை, தியாகம், நிலம்–மக்கள் ஆன்மீக பந்தம் ஆகியவற்றை பேசும் இந்தப்படம் குறித்து விரைவில் மேலும் தகவல்கள் தரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.