நேபாளத்தில் பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், யு டியூப், எக்ஸ், லிங்க்டுஇன் உள்ளிட்ட நிறுவனங்கள் வலைத்தளங்களை முடக்கி, நேபாளத்தின் தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு அந்நாட்டு தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதனையடுத்து அவை முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அரசை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 19பேர் உயிரிழந்துள்ளதோடு, 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில்,போராட்டம் தீவிரமடைவதை அடுத்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரமேஷ் லோகாக் ராஜினாமா செய்துள்ளார்.