சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ஒரு இளம்பெண் தனது காதலனுடன் சாலையில் நின்று இ-ரிக்ஷாவை நிறுத்தி, ஓட்டுநரை “அண்ணா” என அழைத்ததால் எழுந்த பரபரப்பான சம்பவத்தை வெளிப்படுத்துகிறது. இன்ஸ்டாகிராமில் alaina_gupta19 என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், பெண்ணின் ஆடை மற்றும் ஒப்பனை ஆபாசமாக இருப்பதாகக் கருதிய இ-ரிக்ஷா ஓட்டுநர், அவரை அறைந்து, “நீ என்னை அண்ணா என்று அழைத்தாய், நான் உனது அண்ணனாக என் கடமையைச் செய்கிறேன்” எனக் கூறுகிறார்.
பின்னர், அவர் அந்தப் பெண்ணின் காதலனையும் தாக்கி, அங்கிருந்து செல்லுமாறு எச்சரிக்கிறார். இறுதியாக, பெண்ணை தனது இ-ரிக்ஷாவில் ஏற்றி, அவளை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறுகிறார்.
View this post on Instagram
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி, 25,878-க்கும் மேற்பட்ட லைக்குகளையும், ஏராளமான கருத்துகளையும் பெற்றுள்ளது. பார்வையாளர்களின் கருத்துகளில், ஒருவர் “பையா என்று அழைக்காத டெக்னிக்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்,
மற்றொருவர் “ராக்கி கட்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” எனக் கேட்டார். இன்னொருவர் “பையா அருமையாக நடித்துவிட்டார்” எனப் பாராட்டினார்.
இந்த வீடியோவில் இதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை. இந்த சம்பவம், சமூகத்தில் “அண்ணன்” என்ற புனிதமான உறவைப் பயன்படுத்தி நிகழ்ந்த நகைச்சுவை மற்றும் சர்ச்சையை ஒருங்கே பேச வைத்துள்ளது.