தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். சினிமாவில் உச்சம் தொட்டுவிட்டு விஜய் அரசியலில் களம் இறங்கி உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக முனைப்போடு செயல்பட்டு வருகிறார். தனது அரசியல் வருகையை விக்கிரவாண்டியில் கட்சி சார்பில் நடைப்பெற்ற முதல் மாநில மாநாட்டில் அறிவித்தார்.
அது மட்டுமில்லாமல் தன்னுடைய அரசியல் எதிரிகளையும் அடையாளப்படுத்தினார். முதல் மாநாட்டில் விஜய் பேச்சு ரசிகர்களின் கவனத்தை பெற்றது. ஏனென்றால் விஜய் பொதுவெளியில் பெரிதும் பேசி நாம் பார்த்ததில்லை. இம் முறை இந்த மாநாட்டில் அனல் பறக்க பேசியது அரசியல் எதிரிகளை கலங்கடிக்க செய்தது.
இந்நிலையில் தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்தினார். இந்த முறை அமைச்சர்களை பங்கமாக கலாய்த்தது மட்டுமின்றி தனது அனல் பறக்கும் பேசியது அரசியல் எதிரிகளை பீதி அடைய செய்தது. விஜயின் பேச்சு பலரின் விமர்சனங்களுக்கு ஆளானது. இந்நிலையில் விஜய் இவ்வாறு செய்கிற அரசியல் எல்லாம் எதிர்வரும் 2026 தேர்தல் வரை தான். அதன்பின் அவர் வந்த பாதைக்கு திரும்பி விடுவார் என்று பல அரசியல் பிரமுகர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
அந்த வகையில் அரசியல்வாதியும் காமெடி நடிகர்ருமான கருணாஸ் விஜயை பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளார். அதில்,” விஜயை மக்கள் சினிமா பாக்குற மாதிரி தான் பார்க்க வராங்க. சினிமா புகழை மட்டும் வச்சிக்கிட்டு விஜய் ஆட்சியை பிடிச்சிடலாம்னு நினைக்கிறது சிரிப்பா இருக்கு. ஆட்சிக்கு வரணும்னா மக்களோட பிரச்சினைக்கு உயிரைக் கொடுத்து வேலை செய்யணும். ஆறு மாசத்துக்கு முன்னாடி கட்சி ஆரம்பிச்சுட்டு அடுத்த ஆறு மாசத்துல முதலமைச்சர் ஆகிடலாம்ங்குற நினைப்பே தப்பு. கார்ப்பரேட் கம்பெனி மாதிரி வீட்டுக்குள்ளே உட்கார்ந்து வேலை செஞ்சா எந்த பயனும் தராது”. என்று கருணாஸ் கூறி உள்ளார்.