நேபாளத்தில் வெடித்த போராட்டத்தில் 19 பேர் கொல்லப்பட்ட நிலையில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நேபாள பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவி வகித்து வரும் நிலையில் அவர் ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் சமூக ஊடகங்களுக்கு தடை விதித்தது பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. இதில் நேபாள பாதுகாப்பு படையினர், போராட்டக்காரர்கள் இடையே எழுந்த மோதலில் 19 பேர் பலியானார்கள்.
அதை தொடர்ந்து சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனாலும் சர்மா ஒலி ஆட்சிக்கு எதிராக நேபாளம் முழுவதும் போராட்டம் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில்தான் சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை அவரது உதவியாளர் பிரகாஷ் சில்வால் உறுதி செய்துள்ளார். மேலும் ராஜினாமா செய்த சர்மா ஒலி விரைவில் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
Edit by Prasanth.K