வாகன ஓட்டிகள் நிலுவையில் வைத்துள்ள போக்குவரத்து அபராதங்களை தள்ளுபடி செய்யும் அதிரடி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறவுள்ள தேசிய லோக் அதாலத் நிகழ்வில், பல்வேறு விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை முற்றிலும் மன்னிக்கவோ அல்லது 50% வரை தள்ளுபடி செய்யவோ முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சலுகையை பெற விரும்பும் பொதுமக்கள், National Legal Services Authority இணையதளத்தில் (NALSA) முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒருபக்கம் போக்குவரத்து விதிகளை மீறியதற்கான அபராத சுமையிலிருந்து விடுபட இது சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ள நிலையில், தமிழகமெங்கும் உள்ள வாகன ஓட்டிகள் இதனைச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.