கோவாவில் நடத்தப்படும் சூதாட்ட விடுதிகளில் சட்டவிரோதமாக பெட்டிங் நடத்தி, சொத்து குவித்ததாக கர்நாடகாவின் சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ வீரேந்திர பப்பிவை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் கைது செய்திருந்தனர்.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத 11 கோடி ரூபாய் ரொக்கம், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருள்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் மீண்டும், வீரேந்திர பப்பிக்கு சொந்தமான ஒரு வங்கியின் லாக்கரில் மட்டும் 22 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் 17 வைர மோதிரங்கள் சிக்கியுள்ளதாகவும், மற்றொரு வங்கி லாக்கரில் 5 கிலோ தங்க நகைகள் சிக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
வீரேந்திர பப்பியிடம் நடத்தப்படும் விசாரணையின் போது கிடைக்கும் தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் நடத்தும் சோதனைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் தங்க நகைகள் தொடர்ந்து சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா: ஒரே எண்ணில் 4 ஆடம்பர கார்கள், ஆன்லைன் பந்தயத் தளங்கள்; காங்கிரஸ் MLA கைதின் பின்னணி என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk