Gandhikannadi:போஸ்டர கிழிக்கிறாங்க! 'மதராஸி' படத்தால் 'காந்திக்கண்ணாடி' படத்துக்கு நேர்ந்த கொடுமை
CineReporters Tamil September 07, 2025 08:48 AM

Gandhikannadi:நேற்று அனைவரின் எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆனது மதராஸி திரைப்படம். சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஒரு ஆக்சன் திரில்லர் திரைப்படமாகவே வெளியானது. இதற்கு முன்பு வரை சிவகார்த்திகேயன் காதல் கலந்த காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அதன் பிறகு அமரன் திரைப்படம் மூலம் ஒரு பவர் பேக் நடிப்பை வெளிப்படுத்தினார். அந்த படம் கொடுத்த வெற்றி அவரை அடுத்தடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல உதவியாக இருந்தது. அமரன் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து மதராசி பராசக்தி என தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களுடன் பணியாற்ற வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதனால் அவருடைய சம்பளம் அறுபதிலிருந்து 70 கோடியாக உயர்ந்திருக்கிறது. சமீப காலமாகவே அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என கைதேர்ந்த நடிகராக காணப்படுகிறார். இந்த நிலையில்தான் மதராசி திரைப்படம் வெளியாகி பாசிட்டிவ்வான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனால் ஆரம்பத்தில் இந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்ததாக தெரியவில்லை. படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து தான் படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு வித நம்பிக்கையே ஏற்பட்டது.

அந்த அளவுக்கு படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக தெரிய ஆரம்பித்தார். அதன் பிறகு நடந்த இசை வெளியீட்டு விழா சிவகார்த்திகேயனின் கேரளா ஆந்திரா மாநிலங்களில் அவர் செய்த பிரமோஷன் என படத்திற்கு உறுதுணையாக அமைந்தது. இந்த நிலையில் கே பி ஒய் பாலா நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் காந்தி கண்ணாடி. அந்த படமும் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதற்கிடையில் காந்தி கண்ணாடி படத்தின் தயாரிப்பாளர் திடீரென ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதாவது காந்தி கண்ணாடி படத்திற்கு ஷோக்கள் கொடுக்காமல் திரையரங்குகள் எங்களை அலைக்கழிக்கின்றனர், போஸ்டர்கள் எல்லாம் கிழிக்கப்படுகின்றன, நான் ஆரம்பத்தில் 50 ரூபாய்க்கு போஸ்டர் ஒட்டி அதை வைத்து என்னுடைய பொழப்பை ஒட்டியவன், பாலாவும் காரைக்காலில் இருந்து வந்து எப்படியாவது சாதிக்க வேண்டும் என வெறியோடு இருக்கிறவன். ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள்? இந்த மாதிரி நீங்கள் செலவு செய்வதற்கு அந்த பணத்தை வைத்து இல்லாதவர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாமே?

இருந்தாலும் காந்தி கண்ணாடி படத்திற்கு மக்களிடமிருந்து நல்ல ஒரு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எங்களுக்கு ஆதரவளித்த லாரன்ஸ் மாஸ்டருக்கு மிக்க நன்றி என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இது சிவகார்த்திகேயனின் பி ஆர் குரூப்பு தான் இந்த வேலையை செய்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஏனெனில் காந்தி கண்ணாடி படத்தின் பாசிட்டிவ்வான விமர்சனம் மதராசி திரைப்படத்திற்கு ஏதாவது ஒரு வகையில் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பதனால் சிவகார்த்திகேயனின் பி ஆர் டீம் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என செய்திகள் தொடர்ந்து வருகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.