திருவோணம் இன்று தலை ஓணத்துடன் கேரளாவில் துவங்கியது Dhinasari Tamil %name%
உலகளவில் மலையாள இந்துக்கள் மிக கோலாகலமாக கொண்டாடடும் பண்டிகைகளில் ஒன்றாக திருவோணம் பண்டிகை இன்று தலை ஓணம் பண்டிகையுடன் துவங்கியது.சபரிமலையிலும் இன்று முதலாம் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.பக்தர்களுக்கு முதல் ஓணம் பண்டிகை விருந்து வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு திருவோணம் பண்டிகை செப் 4இல் தலை ஓணம் பண்டிகையாக துவங்கி செப் 5ல் திருவோணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.செப் 6இல் மூன்றாவது ஓணம் செப்4 கடைசி ஓணம் விழாவாக உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது .
சிம்மம் ஆவணி மாதத்தில் மலையாள மொழி பேசும் மக்களால் பாரம்பரிய முறையில் கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் கருதப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு புராணங்களில் பல கதைகள், காரணங்கள் சொல்லப்பட்டாலும் இது கேரள பாரம்பரியத்தை போற்றும் மாவேலி மன்னன் நினைவாக, மஹாவிஷ்ணு திருநட்சத்திரம் ஆவணி அறுவடை திருநாளை கொண்டு ஒற்றுமையின் அடையாளமாக கொண்டாடப்படும் பண்டிகையாக பார்க்கப்படுகிறது.
கடவுளின் சொந்த தேசம் மலைநாடு கேரளா மாநிலத்தில் மலையாள மக்களின் அறுவடை திருவிழாவாக இந்துக்களால் மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் விழாவாக திருவோணம் பண்டிகை உள்ளது.இந்த ஆண்டு திருவோணம் செப் 4இல் தலை ஓணம் பண்டிகையாக துவங்கி செப் 5ல் திருவோணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.செப் 6இல் மூன்றாவது ஓணம் செப்4 கடைசி ஓணம் விழாவாக உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது .அசுரகுல மன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அறுவடை காலத்தின் துவக்கமாக 10 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. 64 வகையான திருவோண விருந்து படகு போட்டிகள், வண்ண வண்ண மலர்களால் கோலமிட்டு மிக பிரம்மாண்டமாக ஓணம் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் அன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது அஸ்தம் நாளில் துவங்கி, திருவோணம் வரை 10 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படும். 10ம் நாளான திருவோணம் நட்சத்திரம் மிக முக்கியமான நாளாக கருதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி செவ்வாய்கிழமை துவங்கி, செப்டம்பர் 05ம் வரையிலான 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
புராணங்களின் படி, கேரளாவை ஆண்ட அசுர குல அரசன் மாவேலி மகாபலி மன்னன் அசுரகுலத்தில் பிறந்தாலும் மக்கள் மகிழ்ச்சியடையும் படி தான் தர்மங்கள் செய்து ஆட்சி செய்தான்.தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதற்காக மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினான். இந்த யாகத்தை அவன் வெற்றிகரமாக நடத்தி முடித்தால் இந்திரலோகமே அவனுக்கு வசமாகும். இதனால் கலக்கம் அடைந்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். தேவர்களையும் மக்களையும் காப்பதற்காக 3 அடி உயரம் கொள்ள வாமன (குள்ளமான) வடிவம் எடுத்து மகாபலி மன்னன் யாகம் நடத்தும் இடத்திற்கு சென்றார் மகாவிஷ்ணு.
யாகம் நடத்தும் சமயத்தில் யார் வந்து என்ன யாசகம் கேட்டாலும் இல்லை சொல்லாமல் கொடுக்க வேண்டும் என்பது அரச நியதி. இதை அறிந்து, தனக்கு 3 அடி நிலம் வேண்டும் என கேட்டார் வாமனர். அதை ஏற்று, மகாபலி மன்னனும் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை வாமனரின் கைகளில் விட்டதும், விண்ணுக்கும், மண்ணுக்குமாக திரிவிக்ரமனாக உருவெடுத்த மகாவிஷ்ணு, முதல் அடியில் வானத்தையும், 2வது அடியில் பூமியையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடம் இல்லாததால் தன்னுடைய தலைமை காட்டிய மகாபலியின் தலை மீது கால் வைத்து அவரை பாதாள லோகத்திற்கு அனுப்பினார் மகாவிஷ்ணு. அதே சமயம் தன்னுடைய மக்களை காண ஆண்டு ஒரு முறை பூமிக்கு வரவும் மகாபலிக்கு வரமளித்தார் மகாவிஷ்ணு.
பெருமாள், மகாபலிக்கு அளித்த வரத்தின் படி ஆண்டுக்கு ஒரு முறை தனது நாட்டு மக்களை காண மன்னன் மாவேலத மகாபலி பூமிக்கு வரும் ஆவணி மாத திருவோணம் நட்சத்திர தினமே ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மகாபலியை வரவேற்பதற்காகவே வீடுகள் தோறும் அத்தப்பூ கோலமிட்டு அலங்கரித்து, விதவிதமாக உணவு சமைத்து பரிமாறி கொண்டாடுகிறார்கள். மகாவிஷ்ணு, வாமனராக அவதாரம் எடுத்தது முதல், மகாபலி மீண்டும் பூமிக்கு திரும்பி வருவது வரையிலான காலத்தை போற்றும் விதமாகவே 10 நாட்கள் விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வல்லம் களி புளிகளி பூக்காலம் ஓணதப்பம் ஓணம் களி, கயிறு இழுத்தல், தும்பி துள்ளல் கும்மட்டி களி ஓண துள்ளல் ஓணவில்லு கழிசக்குல்லா மரக்கன்று தானம் அளித்தல், ஓணபொட்டன் ஆடை அலங்காரங்கள், அத்தசமயம் நாட்டுப்புற பாரம்பரிய நடனங்கள் ஓணம் சத்தியா இவை அனைத்தும் சேர்ந்தது தான் ஓணம் கொண்டாட்டம் அமைந்துள்ளது
பாரம்பரிய முறையுடன் கலந்த இந்த கொண்டாட்டம், சடங்குகள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானவையாகும். மகிழ்ச்சி, செல்வ வளம், நிறைவான செல்வம் ஆகியவற்றை வரவேற்கும் நாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. கேரளாவின் பாரம்பரியத்தை போற்றி கொண்டாடும் உன்னதமான பண்டிகையாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
உலகளவில் மலையாள இந்துக்கள் மிக கோலாகலமாக கொண்டாடடும் பண்டிகைகளில் ஒன்றாக திருவோணம் பண்டிகை இன்று தலை ஓணம் பண்டிகையுடன் துவங்கியது.சபரிமலையிலும் இன்று முதலாம் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.பக்தர்களுக்கு முதல் ஓணம் பண்டிகை விருந்து வழங்கப்பட்டது.குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் முன்பு தினமும் ஓணக்கோலம் வரையப்பட்டு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திருவோணம் இன்று தலை ஓணத்துடன் கேரளாவில் துவங்கியது News First Appeared in Dhinasari Tamil