ஆர்.ஜே பாலாஜி செய்யும் அலப்பறை.. கருப்புக்கு வந்த சிக்கல்.. பாவம் சூர்யா!..
CineReporters Tamil August 31, 2025 03:48 AM

Karuppu: ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கி அதன்பின் ஹீரோ அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே பாலாஜி. எல்.கே.ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டு படங்களும் ஆர்.ஜே பாலாஜிக்கு வெற்றி படங்களாக அமைந்தது. அந்த நம்பிக்கையில்தான் இப்போது இயக்குனராக மாறிவிட்டார்.

மூக்குத்தி அம்மன் 2 படத்தை அவர்தான் எடுப்பதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் அவருக்கு மோதல் ஏற்பட அந்த படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு போனது. எனவே அதே கதையை கொஞ்சம் மாற்றி சூர்யா நடிக்க, சூர்யாவின் உறவினர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில் கருப்பு என்கிற படத்தை இயக்க துவங்கினார்.

இப்படத்தில் வழக்கறிஞர் மற்றும் கருப்பண்ணசாமி என இரண்டு கெட்டப்புகளில் வருகிறார். சூர்யா சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வீடியோ வெளியானது. சூர்யாவுக்கு இதற்கு முன் வந்த கங்குவா,ரெட்ரோ ஆகிய படங்கள் கை கொடுக்காத நிலையில் கருப்பு படம் கண்டிப்பாக ஹிட்டடுக்கும் என எல்லோரும் சொல்கிறார்கள். ஏனெனில் ஜனரஞ்சகமான கமர்சியல் படமாக கருப்பு உருவாகி இருக்கிறது. இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படவில்லை. அதனால் 2026 வருடம்தான் வெளியாகும் என செய்திகள் வெளியானது.

#image_title

ஆனால் கருப்பு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாததற்கு அது மட்டுமே காரணம் இல்லை என்பதை இப்போது தெரியவந்திருக்கிறது. இந்த படம் துவங்கியது முதலே ஆர்.ஜே பாலாஜிக்கும், எஸ்.ஆர் பிரபுவுக்கும் ஆகவில்லையாம். சில நாட்கள் கடுப்பாகி படப்பிடிப்பு நடத்தாமல் நிறுத்தி இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி.

தற்போது படத்தை எடிட் செய்து பார்த்ததில் இன்னும் 15 முதல் 20 நாட்கள் ரீசூட் செய்ய வேண்டும் என அதிர்ச்சி கொடுத்திருக்கிறாராம் ஆர்.ஜே பாலாஜி. ஆனால் தயாரிப்பு நிறுவனம் இதை ஏற்கவில்லை. ஆனால் ரீசூட் செய்தே தீருவேன் என அடம்பிடிக்கிறாராம் ஆர்.ஜே.பாலாஜி. எனவே கருப்பு படம் என்னவாகும் என்பது தெரியவில்லை.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.