பெண்களின் ஆரோக்கியத்தில் மாதவிடாய் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தங்களுக்கு மாதவிடாய் (Menstruation) முறையாக வருகிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளவும், மாதவிடாய் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளும் வகையிலும் பல பெண்கள் மாதவிடாயை கண்காளிக்கும் செயலிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், அவ்வாறு மாதவிடாய் கண்காணிப்பு செயலிகளை (Menstruation Regulator Apps) பயன்படுத்துவது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதற்கு வாய்ப்பை உருவாக்கிவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மாதவிடாய் கண்காணிப்பு செயலிகளை பயன்படுத்துவது ஆபத்துபெரும்பாலான பெண்கள் தங்களது மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்க, மாதவிடாய் கண்காணிப்பு செயலிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், அத்தகைய செயலிகள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய மாதவிடாய் கண்காணிபு செயலியான ஃப்ளோ ஹெல்த் (Flo Health) அமெரிக்காவில் பயனர்களின் தனியுரிமையை மீறியதாகவும், லட்சக்கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்பனை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Google Translate : கூகுள் டிரான்ஸ்லேட்டில் இனி புது மொழியே கற்கலாம்.. வந்தது அசத்தல் ஏஐ அம்சம்!
நிறுவனங்கள் தங்களது பொருட்களை விளம்பரம் செய்ய இந்த மாதவிடாய் செயலி மூலம் பெண்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்றுக்கொண்டதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த செயலியை பயன்படுத்தும் ஏராளமான பெண்கள் திரண்டு கூட்டாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த விவகாரம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது எப்படி?இத்தகைய செயலிகள் வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட நிலையில், அவற்றிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : மெட்டா ஏஐ டிரான்ஸ்லேஷன் வசதி – இனி ஒரே வீடியோவை அனைத்து மொழிகளிலும் பகிரலாம்!
எந்த ஒரு செயலியை பயன்படுத்தினாலும், அதில் கேட்கப்படும் அத்தியாவசியமற்ற கேள்விகள் மற்றும் அனுமதிகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.