உத்தரப்பிரதேசம் பதாயூன் மாவட்டத்தில் மனதை கலங்கவைக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. 33 வயதான சுனில் என்ற நபர், குருகிராமில் கட்டட வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி லஷ்மி, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் போட்டு வந்துள்ளார். சமீபமாக, மற்றொரு ஆணுடன் சேர்ந்து ரீல்ஸ் போட ஆரம்பித்ததையடுத்து, இது குறித்து சுனிலுக்கு புகார் வந்துள்ளது.
இந்த வீடியோக்களை பார்த்ததும் சுனிலுக்கு கோபம் வந்து, உடனே வேலைவிட்டுத் ஊருக்கு திரும்பினார். இரவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இதில் சுனில், “இந்த மாதிரி வேலையை விட்டுவிடு” என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் மனைவி மறுப்பு தெரிவித்ததோடு, அடுத்த நாள் காலை லஷ்மி சொல்லாமல் வீட்டைவிட்டு சென்றுவிட்டார். எங்கு தேடியும் கிடைக்காததால், மனமுடைந்த சுனில் தன் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த சோக நிகழ்வு சமுதாயத்தில் சமூக வலைதளங்களின் தவறான பயன்பாடு எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஒரு குடும்பத்தை முற்றிலும் சிதைத்துவிட்டது என்பது தான் உண்மை.