தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா 'இனிமேல் விஜய் பற்றி என்கிட்ட எதுவும் கேட்க வேண்டாம்' என நெல்லையில் நடந்த பேட்டியில் கோபமாக தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது: நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் வாக்கு திருட்டு நடப்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. தேர்தலிலும் துஷ்பிரயோகம் நடக்கிறது. தேர்தல் ஆணையமும் நீதிபதிகளும் இணைந்து ஜனநாயக நாட்டில் முறையாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அப்போதுதான் தேர்தலில் நிற்பதற்கும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் வழிவகை கிடைக்கும் என்றும், கண்கூடாக வாக்குக்கு காசு கொடுப்பது தெரிகிறது என்றும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், பீகார் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சீர்திருத்தம் வரவேண்டும் என்றும், சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கு 09 மாதம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் வேண்டும் அறிவித்துள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் நாள்தோறும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறோம். ஆனால்,அவர்கள் விஜய் குறித்த கேள்வியை தவிர்த்து மற்ற கேள்விகள் என்னிடம் கேட்பதில்லை. விஜய் குறித்தும் கூட்டணி குறித்தும் இனி என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.