“ஓடும் பேருந்தில் திடீரென வெடவெடுத்து போன ஓட்டுநர்”… உடம்பெல்லாம் வியர்த்து கொட்டி… சட்டென ஸ்டியரிங்கை விட்டு எழுந்து… உட்கார்ந்தபடியே பறிபோன உயிர்… அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..!!!
SeithiSolai Tamil August 30, 2025 01:48 PM

இந்தோர் நகரிலிருந்து ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுனர் சதீஷ் ராவ் (வயது 36), பயணத்தின்போது திடீரென உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த பரிதாபமான நிகழ்வு, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில், அவர் உட்கார்ந்து இருந்த நிலையில் திடீரென தலையை முன்நோக்கி சாய்த்தபடி மயங்கி விழுவது தெளிவாக காணப்படுகிறது.

பேருந்து ராஜ்நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது சதீஷ் ராவ் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்து, ஸ்டீயரிங்கை தனது சக ஓட்டுனரிடம் ஒப்படைத்துள்ளார். பிறகு பக்கத்தில் உள்ள இருக்கையில்உட்காந்த நிலையில் இருந்த அவருக்கு, சுமார் 15-20 நிமிடங்களில் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.

“>

இதனை பார்த்த பயணிகள் விரைந்து அவரிடம் சென்றனர். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அவரை மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாவது, இது “சைலன்ட் ஹார்ட் அட்டாக்” காரணமாகவே நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். பயணிகள் மற்றும் சக ஊழியர்கள், சதீஷ் ராவை உயிர்ப்பிக்க CPR செய்தும் , கால்களை மசாஜ் செய்தும் உதவ முயன்றுள்ளனர்.

ஜோத்பூரை சேர்ந்த இவர், தனது உடல்நிலை பாதிப்பை உணர்ந்ததும் ஓட்டுவதிலிருந்து விலகியதால், பேருந்தில் பயணித்த மற்ற பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் பிரேத பரிசோதனையை மறுத்துள்ளனர். அவரது பொறுப்புணர்வு பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.