அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த அரசு பேருந்து - 2 பேர் பலி.!
Seithipunal Tamil August 30, 2025 09:48 AM

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே புத்தூரில் அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு பேருந்து ஒன்று சிதம்பரத்தில் இருந்து வேளங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் அந்த பேருந்து அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சங்கர் மற்றும் அந்த இடத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த சரண்யா என்ற பெண் உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.