அதிபர் பதவிக்கு தயாராகி வருகிறேன்.. அமெரிக்க துணை அதிபர் டிஜே வான்ஸ் பேட்டி..!
WEBDUNIA TAMIL August 30, 2025 06:48 AM

அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அதிபர் பதவிக்கு தன்னை தயார்படுத்தி வருவதாகத் தெரிவித்தது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு அமெரிக்க ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தனது பணியின்போது "பயங்கரமான சோகம்" ஏற்பட்டால், அதைத் தலைமை பதவிக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகக் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 200 நாட்களுக்கும் மேலாக, தான் சிறந்த பயிற்சியை பெற்று வருவதாக எண்ணிப் பார்க்கவில்லை என்றும் வான்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், தானும் தனது மனைவி உஷாவும் தற்போது தங்களது பணிகளில் சிறப்பாக கவனம் செலுத்தி வருவதாகவும், ஒருவேளை அதிபர் பதவிக்கான வாய்ப்பு தனக்கு கிடைத்தால் அது குறித்து சிந்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது 70 வயதாகும் அதிபர் டிரம்பின் உடல்நிலையில் சில பாதிப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்த அதிபர் பதவிக்கு ஜே.டி. வான்ஸ் தயாராகி வருவதாக அவரது இந்த பேட்டி சுட்டிக்காட்டுகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா இவரது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.