விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பு... தென்காசியில் அரை நாள் விடுமுறை அளித்ததன் காரணம் என்ன..?
Seithipunal Tamil August 30, 2025 04:48 AM

தென்காசி பொறுத்தவரை 2 கட்டங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 312 சிலைகளையும் ஊர்வலமாக எடுத்துச் சென்று இன்று நீர்நிலைகளில் கரைக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு பின்னர் இன்று நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் கரைக்க பக்தர்கள் தயாராகி வருகிறார்கள்.

இதனால் தென்காசி அருகே கடையநல்லூர், சங்கரன்கோவில்,புளியங்குடி பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க அம்மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதுமட்டுமின்றி,விநாயகர் ஊர்வலத்தையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற நிலையை அறிந்து இன்று அரைநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

இது இன்று மதியம் அறிவிக்கப்பட்டுள்ள மாதாந்திர தேர்வுகளை மற்றொரு நாளில் நடத்திட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.இதற்கு மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.இதனால் அம்மாவட்ட மாணவர்கள் குஷியில் இருக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.