மதுரையில் இரண்டு திமுக அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று செல்லூர் ராஜு குற்றம்சாட்டினார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, ‘ஒரு அமைச்சர் வீடுகள் தோறும் டிபன் பாக்ஸ் கொடுத்து வருவதாகவும், இது ஒரு அமைச்சரின் வேலையா என்று மக்கள் கேவலமாக பேசுவதாகவும் அவர் கூறினார்.
மற்றொரு அமைச்சர் தனது பதவி பறிக்கப்பட்டதால் அமைதியாகிவிட்டார் என்றும், அவர் அடுத்த தேர்தலில் நிற்பாரா என்பது தெரியவில்லை என்றும் செல்லூர் ராஜு விமர்சித்தார்.
மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடுகளுக்கு, இரண்டு திமுக அமைச்சர்களுமே காரணம் என்று செல்லூர் ராஜு குற்றம்சாட்டினார். அவர்கள் மாநகராட்சியை முறையாகக்கண்காணிக்க தவறியதே இந்த முறைகேடுகள் நடைபெறக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் மதுரைக்கு என்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பிய செல்லூர் ராஜு, அ.தி.மு.க. ஆட்சியின்போது மதுரைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்ததாகப் பெருமிதம் தெரிவித்தார்.
Edited by Mahendran