பிரபல இந்தி திரைப்பட நடிகை பிரியா மராத்தே, புற்றுநோயுடன் நீண்டகாலமாகப் போராடி வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 38
'பவித்ர ரிஷ்டா' படத்தில் நடித்ததற்காக ரசிகர்களிடையே பரவலாக அறியப்பட்ட நடிகை பிரியா மராத்தே, அதன் பின்னர் மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தார். கடந்த ஒரு வருடமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரியா மராத்தே அதற்கான சிகிச்சைகளையும் எடுத்து வந்ஹார். பல இந்தி மற்றும் மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
ஏப்ரல் 23,1987 அன்று மும்பையில் பிறந்த பிரியா மராத்தே, தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை மும்பையில் முடித்தார். படிப்பை முடித்த பிறகு, அவர் திரையுலகில் அறிமுகமானார். 'யா சுகனோயா' மற்றும் 'சார் திவாஸ் சசுச்சே' என்ற மராத்தி சீரியல் மூலமாக அறிமுகமானார்.
மராத்தே, பாலாஜி டெலிஃபிலிம்ஸின் 'கசம் சே' படத்தில் வித்யா பாலி வேடத்திலும் நடித்தார், பின்னர் 'காமெடி சர்க்கஸ்' தொடரின் முதல் சீசனில் கலந்துக் கொண்டார். நடிகர் ஜோதி மல்ஹோத்ராவின் கதாபாத்திரத்தில் நடித்தார்.
'படே அச்சே லக்தே ஹைன்', 'து தித்தே மே', 'பாகே ரே மன்', 'ஜெயஸ்துதே' மற்றும் 'பாரத் கா வீர் புத்ரா - மஹாராணா பிரதாப்' போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
2008ல் இந்தி திரைப்படமான 'ஹம்னே ஜீனா சீக் லியா'வில் நடித்தார். கோவிந்த் நிஹலானி இயக்கிய 'டி அனி இடார்' என்ற மராத்தி திரைப்படத்திலும் அவர் நடித்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?