நேரடித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடத்தப்பட்டு, 2500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், இவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் இருந்தது.
ஆசிரியர் பணியில் இல்லாத சிலர், இந்த பணி நியமனத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கான 2 சதவீத இடஒதுக்கீட்டை வழங்காமல், பிறருக்கு பணி நியமனம் வழங்கக்கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்திரகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு நேரடி நியமனத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 2500 பேருக்கு அரசு உடனடியாகப் பணி நியமன ஆணைகளை வழங்கலாம் என உத்தரவிட்டனர். மேலும், பணி நியமனம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும், அடுத்தகட்ட விசாரணைக்காக வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகவும் உத்தரவிட்டனர்.
Edited by Mahendran