மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தலைமையில்ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3, 2025 அன்று நடைபெற்றது. இதில் தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வரிவிகிதங்களை மாற்றி 18% மற்றும் 5% என இரண்டு பிரிவுகளில் வரி விதிக்கப்படும் நடைமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிரடியாக குறையவுள்ளது. குறிப்பாக கார்கள் என்பது நடுத்தர வர்க்கத்தினரின் கனவு. இந்த நிலையில் சிறிய கார்கள் 18 சதவிகித வரம்புக்குள் கொண்டுவரப்படவுள்ளது. அதன் படி இந்த கட்டுரையில் எந்தெந்த மாடல் கார்களின் விலை குறையும் என பார்க்கலாம்.
சிறிய கார்களின் விலை குறைய வாய்ப்புமுன்னர் 28 சதவிகிதம் ஜிஎஸ்டி மற்றும் 1 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் காம்பன்சேஷன் செய் விதிக்கப்பட்ட சிறிய கார்கள் இனி 18 சதவிகிதம் என்ற பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1,200சிசிக்கு குறைவாக உள்ள பெட்ரோல், எல்பிஜி, சிஎன்ஜி கார்கள், மற்றும் 1,500 சிசிகள் குறைவான டீசல் கார்கள் ஆகியவற்றின் விலை அதிரடியாக குறையவுள்ளது.
இதையும் படிக்க : டூத் பேஸ்ட் முதல் கார் வரை.. அதிரடியாக குறைந்த ஜிஎஸ்டி.. விலையும் குறையும்!
விலை குறையும் கார்களின் பட்டியல் ஹாட்ச்பேக்ஆகிய கார்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காம்பாக்ட் செடான்இது போக 350சிசிக்கு குறைவாக உள்ள பைக்குகளுக்கு ஜிஎஸ்டி விகிதம் 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பால் முதல் புற்றுநோய் மருத்து வரை.. இந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. பட்டியல் இதோ!
விலை அதிகரிக்கும் வாகனங்கள்விலையுயர்ந்த கார்களை பொறுத்தவரை 1,500சிசிக்கு மேற்பட்ட எஞ்சின் திறன் அல்லது 4,000எம்எம் நீளத்துக்கு அதிகமான வாகனங்கள் 40 சதவிகித ஜிஎஸ்டி விகிதத்துக்குள் வரவுள்ளது. குறிப்பாக எஸ்யூவி, எம்யூவி, எக்ஸ்யூவி போன்ற வகை கார்கள் அனைத்துக்கும் அதிக வரி விதிக்க்கப்படவுள்ளது.
விலை உயரக்கூடிய கார்கள்இதுபோக ஆடி பிஎம்டபுள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், லாண்ட் ரோவர் போன்ற அனைத்து விலையுயர்ந்த கார்களுக்கு 40 சதவிகிதம் ரஜிஎஸ்டி வரி விதிக்கப்படவுள்ளது.