பொதுவாக இந்த காய் கறிகள் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது செய்யும் ,அதே நேரத்தில் அதை எப்படி சாப்பிட்டால் நம் உடல் எடை குறைக்க உதவி புரியும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.வெங்காயத்தில் உடலில் தங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கும் சக்தி அதிகமாக உள்ளது.
2.எனவே, வெங்காயத்தின் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
3.வெங்காயம் அதிகம் சேர்த்து கொள்வதால் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
4.அடுத்து ஆளி விதை .எடையைக் குறைக்க ஓர் ஆரோக்கியமான விதை தான் ஆளி விதை. .
5. இந்த ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கிறது ., மேலும் அதிகளவு உணவு உட்கொள்வதையும் தடுக்கும்.
6.அடுத்து ப்ராக்கோலி .உடல் எடையையும் குறைக்க உதவும் உணவுகளுள் ப்ராக்கோலியும் ஒன்று.
7.இந்த ப்ராக்கோலியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
8.அடுத்து கேரட் கண்களுக்கு நல்லது. அதுமட்டுமின்றி உடல் எடையைக் குறைப்பதில் கேரட் பயன்படும்
9.அடுத்து தக்காளி .தக்காளி உடல் எடையை குறைத்திடவும் அழகான சருமத்தை பெறவும் பெரிதும் உதவுகிறது.
10.அடுத்து கசப்பான பாகற்காய்.இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதுடன், உடல் எடையை எளிதாக குறைக்கும்.