அடக்கொடுமையே.! “ஒரு சமோசாவுக்காக இப்படியா”..? போர்க்களமாக மாறிய குடும்பம்.. மாப்பிள்ளை வீட்டாரை பெளந்து கட்டிய மனைவி குடும்பம்.. வைரலாகும் வீடியோ…!!!!
SeithiSolai Tamil September 07, 2025 12:48 PM

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சமோசாவை வெறித்தனமாக விரும்பியதுதான் ஒரு குடும்பத்தில் பெரும் கலவரமாக மாறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, சமீபத்தில் இளம்பெண், தனது கணவரிடம் சமோசா வாங்கி வருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் அதை மறந்து வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே பெரும் சண்டை ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில், மனைவியின் கோபம், ஒரு பெரிய அளவுக்குச் சென்று, உடனே தனது பெற்றோரை அழைத்து வீட்டுக்கு வரச் சொல்லியுள்ளார். பின், இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியதில், கணவரும், அவரது தந்தையும் மனைவியின் குடும்பத்தினரால் தாக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த விவகாரம் றுநாள் பஞ்சாயத்துக்கும் இந்த விவகாரம் சென்றது. அங்கு நடந்த பேச்சுவார்த்தையின் போதும், இருவருக்கும் இடையிலான மோதல் மீண்டும் ஏற்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தை அருகிலிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். உடனே அந்த வீடியோ வைரலாக பரவியது. இதையடுத்து, பல நெட்டிசன்கள், “சமோசாவுக்காக குடும்பம் சண்டையாடுவதா? என்று கேள்வி எழுப்பி, சம்பந்தப்பட்ட பெண்ணை வசைபாடி வருகிறார்கள்.

மேலும் சமோசாவை மையமாகக் கொண்டு உருவான இந்த குடும்பக் கலவரம், சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. இதுபோன்ற சிறிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது எனப் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.