நடிகர் விஜய் குறித்து நடிகை த்ரிஷா பேசிய விடியோ வைரல்!
Seithipunal Tamil September 08, 2025 08:48 AM

நடிகர் விஜய் குறித்து நடிகை த்ரிஷா பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தனது சினிமா பயணத்தை முடித்து, கடைசி திரைப்படமாக ஜனநாயகனில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய விஜய்யுடன் த்ரிஷா பல வெற்றிப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். 

கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ போன்ற படங்களில் இவர்களின் ஜோடி திரைக்கு வெளியேவும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தது. சமீபத்தில் வெளியான கோட் படத்தில் ‘மட்ட’ பாடலுக்கு த்ரிஷா நடனமாடியதும் பேசுபொருளானது.

இந்த நிலையில், ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் த்ரிஷாவிடம் விஜய்யின் புகைப்படம் காட்டப்பட்டது. அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதற்கு பதிலளித்த த்ரிஷா, “விஜய்யின் புதிய பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவர் எதைக் கனவாகக் கொண்டிருந்தாலும் அது நிறைவேற வேண்டும். ஏனெனில் அவர் அதற்குரியவர்” என்று தெரிவித்தார்.

இந்த கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் ரசிகர்கள் அந்த விடியோவை பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு தற்போது மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடுகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், அவரின் செல்வாக்கு மேலும் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.