குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
TV9 Tamil News September 09, 2025 02:48 AM

நடிகர் அஜித்குமார் (Actor Ajith Kumar) நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி முதலாவதாக பிப்ரவரி மாதம் அஜித் குமார் நடிப்பில் வெளியானது விடாமுயற்சி. இந்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். இதில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் ஒரு ஆங்கிலப் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்ததாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பெரிய அளவில் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை என்பது அஜித் ரசிகர்களுக்கு வருத்தம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திலும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தான் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில், ரெடின் கிங்ஸ்லி, சிம்ரன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்த நிலையில் படத்தில் இளையராஜா பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியது சர்ச்சையைக் கிளப்பியது.

குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு:

இந்தப் படத்தில் வெளியான பாடல்களை விட இளையராஜா இசையில் வெளியான இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக் குருவி மற்றும் ஒத்த ரூபாயும் தாரேன் ஆகிய மூன்று பாடல்களை பயன்படுத்தி இருந்தனர். இந்த பாடல்களைப் பயன்படுத்த படக்குழு அனுமதி பெறவில்லை என்று இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி குட் பேட் அக்லி படத்தின் இளையராஜாவின் பாடகளை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

Also Read… கூலி படத்தில் தலைவர் ரஜினிகாந்த் பக்கதுல நிக்கிறதே போதும் எனக்கு – நடிகர் உபேந்திரா

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு:

33 years of phenomenal journey💥💥💥💥💥your a rare gem 💎 with unmatched hardwork❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻such a pure hearted soul❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 love you sir❤️❤️❤️❤️🙏🏻🙏🏻 #33YearsOfAJITHISM pic.twitter.com/4KmIORjLFI

— Adhik Ravichandran (@Adhikravi)

Also Read… தமிழ்நாடே அதிர்ந்த சம்பவம்.. நிஜ கதையை கையிலெடுக்கும் ஞானவேல்.. நடிகராக மலையாள சூப்பர் ஸ்டார்!?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.