கனமழை வெளுக்கும்.. 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.. சென்னையில் எப்படி?
TV9 Tamil News September 09, 2025 08:48 AM

சென்னை, செப்டம்பர் 08 : தமிழகத்தில் மூன்று தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் (Tamil Nadu Weather) தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2025 செப்டம்ர் 8ஆம் தேதியான  இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கூட அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால், பகல் நேரங்களில் வெயில் கொளுத்தியம், இரவு நேரங்களில் மழை பெய்தும் வருகிறது. புறநகரில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

அதன்படி, ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் மிதமான மழையும், கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2025 செப்டம்பர் 8ஆம் தேதியான இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : ரெடியா இருங்க.. இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

WEATHER FORECAST / WARNING FOR NEXT 7 DAYShttps://t.co/eRlUBZmTu8 pic.twitter.com/vehfKwzWPk

— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc)


2025 செப்டம்பர் 9ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 செப்டம்பர் 10ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நாகை, தேனி, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.

Also Read : 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு ? வானிலை சொல்லும் தகவல்..

மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 செப்டம்பர் 8,9ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.