ரஜினி இந்த வயதிலும் கூலி படத்தில் நடித்து அதிரி புதிரி ஹிட் கொடுத்து வருகிறார். கமல் ஒரு பக்கம் அமெரிக்காவில் போய் AI கத்துக்கிட்டு வராரு. தயாரிப்பில் பல ஹிட் கொடுக்குறாரு. நடிப்புல புதிய பரிமாணம் காட்டுறாரு. கமல் இப்ப உலக சினிமாவில் ஏதாவது புதிய தொழில்நுட்பம் வந்தாலும் கத்துக்குவாரு. அந்த ஆர்வம் இன்னமும் இருக்கு. அதுதான் அவரது அப்டேட்.
இப்படி 2 துருவங்களும் ஆளுமையுடன் இருக்கு. கிட்டத்தட்ட 46 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடைசியா இருவரும் இணைந்த நடித்த படம் அலாவுதீனும் அற்புத விளக்கும். இந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் இணையவில்லை. தனித்தனியாக நடித்தால்தான் நமக்கு லாபம்னு கமல் ஆலோசனை சொல்ல இருவரும் தனியாக நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருவரும் மீண்டும் இணைந்து படத்தில் நடிக்கப் போவதாக செய்தி வந்தது. ஆனால் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு இதுகுறித்து என்ன சொல்றாருன்னு பாருங்க.
எனக்கு தெரிஞ்சி கமலும், ரஜினியும் இணையும் புதிய படம் இன்னும் 4 மாதங்களில் துவங்கப்பட இருக்கு. கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு. ரஜினிக்கும் அவர் ஃபேவரைட். கமலுக்கும் ஃபேவரைட். இரண்டு பேரையும் ரொம்ப புரிஞ்சவர். எந்த மீட்டர்ல இவங்களைக் கலந்து கொடுத்தா ஆடியன்ஸ்சுக்குப் பிடிக்கும்னு அவருக்கு ரொம்ப நல்லா தெரியும். ஆனா சில பேரு சொல்றாங்க. ரவிக்குமார், ஷங்கர் மாதிரியான டைரக்டர்ஸ் எல்லாம் அவுட் டேட் ஆகிட்டாங்க.
ஆனா இன்னைக்கு இருக்குறதுல நெல்சன், லோகேஷ் மாதிரியான டைரக்டர்ஸ் தான் ஆப்டா இருப்பாங்கன்னு சொல்றாங்க. அந்த வகையில டைரக்டர்ஸ் இன்னும் முடிவாகல. இந்தப் படத்தை கமல் தயாரிப்பார். ஆரம்பத்துலயே சொல்லியாச்சு. ஒருவேளை ரஜினியும் சேர்ந்து தயாரிக்கலாம். ஏன்னா இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வியாபாரம் இந்தப் படத்துக்கு இருக்கும். இந்தப் புராஜெக்ட் எப்படி ஆரம்பிக்கப் போகுதுன்னு இனி வரும் காலங்களில்தான் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.