தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், காணொலி மாநாட்டு முறையில் மதியம் 12 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கும்.
இக்கூட்டத்தில் திமுகவின் முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், ஓரணியில் நடைபெறும் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை திட்டம் தொடர்பாகவும் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.