ராமநாதபுரத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பாக்கு வெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தினகரன் (47). இவர் விறகு வெட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இன்று மாலை நான்கு மணி அளவில் சாயல்குடி அருகே உள்ள எம்.புதுக்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் விறகு வெட்டி கொண்டிருக்கும்போது லேசான மழையின் போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த தினகரன் உடலை கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர்