Madharasi: தோரணம், கட் அவுட்னு இல்லாம.. ரசிகர்களின் செயலால் திக்குமுக்காடிய சிவகார்த்திகேயன்
CineReporters Tamil September 09, 2025 04:48 PM

Madharasi: சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் மதராசி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு ஆக்சன் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்துள்ளதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படம் வெளியானதிலிருந்து பாசிட்டிவான விமர்சனங்களைத் தான் இந்த படம் பெற்று வருகிறது. படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் இன்று திங்கள்கிழமை என்பதால் இன்று தான் அதனுடைய உண்மையான நிலவரம் என்ன என்பது தெரியவரும். தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் எந்த படமானாலும் அதனுடைய வசூல் அதிகமாகத்தான் இருக்கும்.

அதனால் இன்று அதனுடைய வசூல் என்ன என்பதை பொறுத்து படத்தின் உண்மையான நிலவரம் தெரியவரும். அமரன் திரைப்படத்திற்கு பிறகு ஒரு மாஸ் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இன்னொரு பக்கம் காமெடியிலும் தன்னுடைய ஹியூமரை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தப்படியான ஒரு அந்தஸ்தில் மக்கள் இவரை பார்த்து வருகின்றனர்.

விஜய் இப்போது அரசியலுக்கு போன பிறகு அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என்றும் அனைவரும் கூறி வருகிறார்கள். அதற்கு ஏற்ப கோட் படத்திலும் துப்பாக்கி கொடுக்கும் சீனை வைத்ததன் மூலம் இன்னும் சிவகார்த்திகேயன் மீது ஒரு பெரிய நம்பிக்கை ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த நிலையில் மதராசி திரைப்படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன் மிகவும் உற்சாகத்தில் இருப்பதாகவே தெரிகிறது.

சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் .அதில் அவர் பேசும் போது தோரணம், கட்டவுட் ,பேனர் என கொண்டாடாமல் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நற்பணி மன்றம் சார்பில் பல்வேறு நல உதவிகளையும் செய்து வருவதை பார்க்கும் பொழுது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என அவருடைய ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.