லோகேஷ் இயக்கத்தில் ரஜினி, கமல் இணையும் படம்! "ரஜினியும் நானும் ஒன்றாக நடிக்கிறோம்" - உறுதி செய்த கமல்!
Seithipunal Tamil September 09, 2025 08:48 AM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய கூலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்த இந்தப் படம், வரும் 11-ஆம் தேதி அமேசான் பிரைம் விடியோ ஓடிடியில் வெளியாக உள்ளது.

அமிர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், உலகளாவிய வசூலில் சாதனை படைக்கிறது.

இந்நிலையில், அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் வரவிருப்பது உறுதியாகியுள்ளது. கமலின் RKFL International Films தயாரிக்கும் இந்த படம், இரண்டு வயதான காங்ஸ்டர்களை மையமாகக் கொண்ட கதை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது விழாவில் கமல்ஹாசன் இதனை உறுதி செய்து“நாங்கள் இருவரும் இணைந்து எப்பவோ நடித்திருக்க வேண்டும். வியாபாரம் ரீதியாக சேராமல் இருந்தோம். இப்போது அதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது”
என்று தெரிவித்துள்ளார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.