Madharaasi: முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தைப் பற்றி விமர்சனம் என்பது ரசிகனிடம் மட்டுமே இருந்தது. எப்போது எல்லோரிடமும் ஸ்மார்ட்போன் வந்து Twitter போன்ற சமூகவலைகளில் திரைப்படங்களை புரமோஷன் செய்தார்களோ அப்போது அது பெய்டு ரிவ்யூவர்ஸ் (Paid Reviewers) கைகளுக்கு அது மாறி விட்டது. பணத்தை வாங்கிக் கொண்டு மொக்கை படங்களை ஆஹா ஓஹோ என்று புகழ்வதும், பணம் கொடுக்காவிட்டால் படம் மொக்கை என விமர்சனம் செய்வதும் அவர்களின் தொழிலாகவே மாறிவிட்டது.
இவர்கள் டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ்களை உருவாக்கிக்கொண்டு பணம் சம்பாதித்து வருகிறார்கள். டிவிட்டரை பலரும் பயன்படுத்துவதால் அதன் மூலம் ஒரு நடிகரின் மீது வன்மத்தையும், வெறுப்புகளையும் பலரும் பரப்புகிறார்கள். ஒரு பக்கம் போட்டி நடிகரின் ரசிகர்கள் படத்துக்கு எதிராக வன்மத்தை கக்குகிறார்கள் எனில் ஒருபக்கம் பணத்துக்காக கூவும் விமர்சகர்கள் கால்புணர்ச்சியோடு படங்களை விமர்சனம் செய்கிறார்கள்.
சூர்யாவின் கங்குவா படம் வெளியான போது அந்த படத்திற்கு எதிராக பலரும் வேலை செய்தார்கள். குறிப்பாக சில குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிராக விமர்சனம் செய்தார்கள். அதனாலயே படம் படுதோல்வி அடைந்தது. ஜெயிலர் பட விழாவில் ரஜினி காக்கா கதை சொன்னபின் விஜய் ரசிகர்களுக்கு பிடிக்காத நடிகராக ரஜினி மாறினார். எனவே அவரின் வேட்டையன் படம் வந்தபோது முதல் நாளே வேட்டையன் டிசாஸ்டர் என ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்டிங் செய்து படத்தை காலி செய்தார்கள்.
ரஜினியின் கூலி படம் வந்தபோது படம் காலி.. மொக்கை என டிஜிட்டல் இன்ஃப்ளூயன்சர்ஸ் என்கிற பெயரில் இருக்கும் பலரும் படத்திற்கு எதிராக விமர்சனம் செய்தார்கள். யுடியூப் விமர்சகர் பிரசாந்த் படம் ரிலீசான முதல் நாளிலிருந்து படத்திற்கு எதிராக பொங்கினார். படம் படு மொக்கை என வீடியோ போட்டார். ஒருபக்கம் புளூசட்டை மாறனும் படத்தை நக்கலடித்து வீடியோ போட்டார். ஆனால் இப்போது மதராஸி படம் வெளியாகியிருக்கும் நிலையில் கூலி படத்தை யாரெல்லாம் நெகட்டிவாக விமர்சனம் செய்தார்களோ அவர்கள் எல்லாருமே மதராஸி படத்தை தூக்கி பிடித்து ஆகா ஓகோ என புகழ்கிறார்கள்.
கூலி படம் வெளியான 3 மணி நேரத்தில் கூலி தலைவலி கதையில்லை.. லாஜிக் இல்லை என்றெல்லாம் பதிவிட்டவர்கள் இப்போது மதராஸி படத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்வதும், வெறுப்பை பரப்பாதீர்கள் என அமைதியின் தூதர்கள் போல வேடம் போடுவதும் சந்தேகத்தை கிளப்புகிறது. குறிப்பாக ரஜினிக்கு எதிராக மட்டுமே இவர்கள் ஒன்றிணைந்து வெறுப்புகளை பரப்புகிறார்கள் என்பது தெளிவாக புரிகிறது என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் மதராஸி ரிலீசுக்கு முதல் நாள் பெய்ட் ரிவ்யூவர்ஸ் எல்லோரும் படத்தைப் பற்றி நெகட்டிவாக எழுதினார்கள். அடுத்த நாள் அவர்கள் முருகதாஸ், சிவகார்த்திகேயனை சந்தித்து பேசினார்கள் இப்போது சொல்லி வைத்த மாதிரி அவர்கள் எல்லோரும் படத்தை பற்றி பாராட்டி பேசி வருகிறார்கள். முருகதாஸும் அதற்கு நன்றி சொல்கிறார். இதனால்தான் அஜித்தும், ரஜினியும் இவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அவர்களிடம் இல்லாத பணமா? ஆனால் அவர்கள் இவர்களுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள்.
ஏனெனில் அவர்கள் தங்கள் ரசிகர்களை நம்பி படத்தில் நடிக்கிறார்கள். பணம் கொடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவர்கள் புகழும் படங்களும் தியேட்டரில் காற்று வாங்குகிறது. இப்போதெல்லாம் சினிமாவில் அதிகம் சம்பாதிப்பது பெய்ட் ரிவ்யூவர்ஸ்(Paid Reviewers) மட்டும்தான் என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.