தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் (IMD) மீண்டும் கனமழை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 8ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், செப்டம்பர் 9ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களிலும் கனமழை தாக்கம் அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், அதேபோல், சென்னையிலும் மழை பெய்யக்கூடும் எனவும் அலர்ட் கொடுத்துள்ளது.