புதுடில்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 12% மற்றும் 28% அடுக்குகள் நீக்கப்பட்டு, இனி 5% மற்றும் 18% என்ற இரண்டு மட்டுமே இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் "ஒரே நாடு – ஒரே வரி" நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதுகுறித்து தனியார் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கிடையே பொருளாதார வளர்ச்சியில் கடுமையான வேறுபாடுகள் உள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பது சாத்தியமில்லை" எனத் தெளிவுபடுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது:"ஆடம்பர கார் (Benz) மற்றும் சாமானியர்கள் பயன்படுத்தும் Flip flop செருப்பு – இரண்டுக்கும் ஒரே அளவு வரி விதிப்பது நியாயமற்றது. சமூக மற்றும் பொருளாதார வித்தியாசங்களை கருத்தில் கொண்டு வரி அமைப்பு வடிவமைக்கப்படுகிறது."
மேலும், அரசாங்கத்தின் வரி குறைப்புகள் நுகர்வோருக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பு இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.