பொதுவாக பலருக்கும் தூங்கும்போது விடும் குறட்டை ஒலியால் அவரின் அருகில் யாரும் தூங்க முடியாமல் தவிப்பர் .அதனால் இந்த குறட்டையை எப்படி இயற்கை வழியில் குறைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு அதிக குறட்டை வரும் .நம் உணவில் சேர்க்கப்படும் மற்ற எண்ணெய்களை விட ஆலிவ் எண்ணெய் சேர்த்து சமைத்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் குறட்டையை கட்டுபடுத்தலாம்..
2.இந்த குறட்டையை நிறுத்த டீயுடன் சிறதளவு தேன்,எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தினால் குறட்டையை அறவே நிறுத்த முடியும்.
3.சிலர் அடிக்கடி டீ குடிப்பர் .தொண்டையில் உள்ள அடைப்புகளையும், நெருடல்களையும் நீக்கும் சிறந்த பானமாக டீ உள்ளது. அதனால் குறட்டையும் வராமல் தவிர்க்கப்படுகிறது.
4..சிலருக்கு மது அருந்தும் பழக்கமிருக்கும் மது உங்களது நரம்பு மண்டலத்தை பாதித்து குறட்டை வருவதை அதிகபடுத்தும்.
5.அதிக குறட்டை வருவதை தடுக்க ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான குடி நீரில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடியைப் போட்டுக் கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகலாம்.
6.தூங்கும் போது வரும் குறட்டையை நிறுத்த ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகலாம்.
7., தூங்கும் போது வரும் குறட்டையை நிறுத்த ,படுக்கும்போது , சற்று அதிக அளவில் தலையணைகளைப் பயன்படுத்தி தூங்கினால் குறட்டையை தவிர்க்கலாம்