உங்களுக்கு ஏதேனும் அடிப்பட்டால், உடலில் ஏதேனும் வலி இருந்தால் வலி நிவாரணிகள் உடனடி நிவாரணத்தை தரும். இந்த வலி நிவாரணியை நீண்ட கால பயன்படுத்தும்போது உங்களுக்கு அமிலத்தன்மை, மயக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க பக்க விளைவு இல்லாத சில சமையலறை மசாலாப் பொருட்களை (Kitchen Spices) பயன்படுத்தி சரிசெய்யலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு பாரம்பரிய மருத்துவத்தில் மஞ்சள், இஞ்சி, இலவங்கம் மற்றும் கிராம்பு போன்ற அன்றாடப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. இவை வீக்கத்தை குறைக்கவும், தலைவலியை (Headache) சரி செய்யவும், நீண்ட நாள் வலியை குணப்படுத்தவும் உதவிகிறது. அந்தவகையில், வலி நிவாரணிகளை விட சூப்பராக செயல்படக்கூடிய 5 வீட்டு மசாலாப் பொருட்களின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
மஞ்சள்பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான பொருட்களில் ஒன்று மஞ்சள். மஞ்சளில் குர்குமின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. அதன்படி மஞ்சள் செல்லுலார் மட்டத்தில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. சூடான மஞ்சள் பால், மூலிகை தேநீர் அல்லது கறி என எதுவாக இருந்தாலும் அதில், சிறிதளவு மஞ்சளை பயன்படுத்துவோம். இவை, தசை வலி மற்றும் காயங்களிலிருந்து உடல் விரைவாக மீள உதவி செய்கிறது. கீல்வாதம் அல்லது முதுகுவலி உள்ளிட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மஞ்சள் நிவாரணத்தை வழங்கி, இயற்கையான சக்தியாக திகழ்கிறது.
ALSO READ: வைட்டமின் சி உடலுக்கு ஏன் அவசியம்? இதன் அளவை எவ்வாறு அதிகரிப்பது?
இஞ்சிவலி நிவாரணிகளுக்கு இயற்கையான மருந்தாக இஞ்சி பல நூற்றாண்டுகளாகப பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இஞ்சி இயற்கையாகவே தசை வலி, மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இஞ்சியில் குமட்டல் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், தலைச்சுற்றல் அல்லது வயிற்று வலி போன்ற வலி தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த தேர்வாக உள்ளது. இஞ்சியை தொடர்ந்து உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
இலவங்கப்பட்டைசுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, இலவங்கப்பட்டை ஒரு சக்திவாய்ந்த இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகிறது. இலவங்கப்பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு, அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளை கொண்டுள்ளது. இவை தசை வலி, மூட்டுவலி பிரச்சனை மற்றும் தலைவலியைப் போக்க உதவுகிறது. மேலும், இலவங்கப்பட்டை ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் இயற்கையாகவே உள்ளிருந்து வலியைத் தணிக்கிறது.
கிராம்புகிராம்பில் யூஜெனால் எனப்படும் சேர்மம் உள்ளது. இது இயற்கையான மயக்க மருந்து மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், பல்வலி மற்றும் ஈறு வலிக்கு எதிராக செயல்படுகிறது. இது பல் வலி மட்டுமின்றி, தலைவலி, தசை வலி மற்றும் மூட்டு வலியையும் நீக்குகிறது. மேலும், கிராம்பு பொடியைச் சேர்ப்பது உடல் இயற்கையாகவே வீக்கத்தை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.
ALSO READ: இரவு உணவை தாமதமாக சாப்பிடுகிறீர்களா? காத்திருக்கும் நோய்களின் ஆபத்து
பூண்டுபூண்டில் அல்லிசின் போன்ற சல்பர் சேர்மங்களும், அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மட்டுமின்றி, மூட்டு விறைப்பு, முதுகுவலி மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. மேலும், பூண்டு வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் இது சிறப்பாகச் செயல்படுகிறது. மூட்டு மற்றும் தசை வலி நிவாரணத்திற்கு பூண்டு எண்ணெய் சிறந்த பலன்களை தரும். அதேநேரத்தில், பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துவது மட்டுமின்றி, தொற்று தொடர்பான வலிக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த கேடயமாக செயல்படுகிறது.