பகீர்... தவெக மாநாட்டுக்கு சென்ற இளைஞர் மர்ம மரணம்... !
Dinamaalai September 05, 2025 01:48 AM


 
 வேலூர் மாவட்டத்தில்  கஸ்பா பயர் லைன் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர்  என்.சீனிவாசன். இவர்  வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.  அந்த புகாரில் நடிகர் விஜய்யின் தவெக கட்சி மாநாட்டுக்காக, வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடில் உள்ள ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருபவரின் கட்டாயத்தின் பேரில், என் தம்பி மதனை அவரது சுயலாபத்துக்காக, தவெக மதுரை மாநாட்டுக்கு அழைத்து சென்றனர்.


இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27ம் தேதி அன்று உடல் சிதைந்த நிலையில் சடலமாக எடுத்து வரப்பட்டது.   என் தம்பி மர்ம மரணத்துக்கான காரணம் இதுவரை என்னவென்று தெரியவில்லை. 

ஆகவே என் தம்பியை கட்டாயப்படுத்தி வேனில் அழைத்து சென்று சடலமாக கொண்டு வந்தனர். இது குறித்து  உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரித்து  சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில்  கூறப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட எஸ்பி மயில்வாகனன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.