சத்தீஷ்காரில் 4 நக்சலைட்டுகள் கைது...10 கிலோ வெடிமருந்து பறிமுதல்!
Dinamaalai August 31, 2025 09:48 PM

சத்தீஷ்காரில்,நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ர்: 4 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இதன் காரணமாக நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையால் பல நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். அதேவேளை, நக்சலைட்டுகள் திருந்தி வாழ அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பயனாகவும் அரசின் முயற்சிகளாலும் நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் 4 நக்சலைட்டுகளை நேற்று பாதுகாப்புப்படையினர் கைது செய்தன. அதேபோல் நேற்று பிஜாபூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் 10 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.