திருவள்ளூர் தொகுதி எம்.பி.சசிகாந்த் செந்தில், மத்திய அரசு கல்வித்தொகையை வழங்காததை கண்டித்து நேற்று முன்தினம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய நிலையில் நேற்று 2வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
நேற்று திடீரென சசிகாந்த் செந்திலுக்கு ரத்தஅழுத்தம் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சைக்கு பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தாலும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் சசிகாந்த் செந்தில் அதற்கு மறுப்பு தெரிவித்து மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரதம் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?