இன்று முதல் தமிழகத்தில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிருப்தி..!
WEBDUNIA TAMIL September 01, 2025 08:48 PM

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஆண்டுதோறும் சுங்க கட்டணத்தை மாற்றியமைத்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது, மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கார், வேன், ஜீப்: இந்த வாகனங்களுக்கு ஒருமுறை பயணிப்பதற்கான கட்டணம் ரூ.85-இலிருந்து ரூ.90 ஆகவும், இருமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.125-இலிருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மினி பஸ், லாரி, பஸ் போன்ற பெரிய வாகனங்கள்: ஒருமுறை பயணிப்பதற்கான கட்டணம் ரூ.5-இலிருந்து ரூ.45 ஆகவும், இருமுறை பயணத்துக்கு ரூ.10-இலிருந்து ரூ.65 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு, மதுரை, சேலம், திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.