5,300 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்கள் இரும்பை கண்டுபிடித்து விட்டார்கள் என கீழடி ஆய்வாளர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 6வது புத்தகத் திருவிழா (தொடர்ந்து படி தூத்துக்குடி) -வின் 8வது நாளான நேற்று நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்ற கவிதை- வாசித்தலும் புனைதலும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கதைகளின் பெரும்பரப்பு என்ற தலைப்பில் எழுத்தாளர் மீரான் மைதீன், கீழ்பட்டணம்- வரலாற்றுச் சுவடுகள் என்ற தலைப்பில் தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இரவு 7 மணிக்கு தொல்லியல் ஆய்வுகளும், சங்க கால தமிழரின் தொன்மையும் என்ற தலைப்பில், இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை கீழடி ஆய்வாளரும், இயக்குநருமான கி.அமர்நாத் ராமகிருஷ்ணா கலந்துகொண்டு பேசியதாவது: உலகில், அறிவியல் இந்த அளவிற்கு வளருவதற்கு இரும்பு கண்டுபிடிப்புதான் முக்கிய காரணம் எனவும், அதை கண்டுபிடித்தவர்கள் மத்திய ஆசிய பகுதியில் வாழ்ந்தவர்கள் எனவும் நாம் நம்பிக் கொண்டிருந்தோம்.
ஆனால் உண்மையில்லை என நிரூபித்தது தூத்துக்குடி மாவட்டம் சிவகளைதான். அதற்கு முன்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, கி.மு. 2142லேயே இரும்பு பயன்படுத்தப்பட்ட செய்தியைச் சொன்னது. பின்னர் சிவகளையிலும் , ஆதிச்சநல்லூரிலும் மேற்கொண்ட ஆய்வுகள் மூலமாக 5,300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பை கண்டுபிடித்து விட்டார்கள் என்ற செய்தியை இன்று உலகத்துக்கு அவை சொல்லியுள்ளன என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?