அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான அணியில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, ஷுப்மான் கில் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இதற்கான கட்டாய உடற்பயிற்சி மற்றும் யோ-யோ தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) நடைபெற்றன. இதில் மூவரும் தங்களது உடல் சுறுசுறுப்புத் திறனை நிரூபித்து, பரிசோதனைகளில் வெற்றி பெற்றனர்.
இதன் அடிப்படையில், இந்திய அணியின் முக்கிய தூண்களாக கருதப்படும் இத்திறமைமிக்க வீரர்கள் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், இவர்கள் பங்கேற்பதன் மூலம் இந்திய அணியின் வலுவான அணிக்கட்டமைப்பும், வெற்றியின் நம்பிக்கையும் மேலும் உறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதில் ரோகித்-கில் கூட்டணியின் தொடக்க ஆட்டம் மற்றும் பும்ராவின் பந்து வீச்சு இந்திய அணிக்குப் பெரும் பலமாக அமையும்.