தற்போது உள்ள தமிழ் சினிமாவில் வாரம் வாரம் புது புது கதைக்களங்களுடன் திரைப்படங்கள் வெளியாகின்றன. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மசாலா படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. நான்கு ஃபைட், 4 சாங், காமெடி காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த மசாலா படங்கள் தான் வெற்றி படங்களாக இருந்தது.
ஆனால் தற்போது ரசிகர்களின் ரசனை மாறத் தொடங்கி விட்டது. தற்போது படங்களில் பாடல்கள் இருப்பதே அரிதாகிவிட்டது. கதைக்குத் தேவை என்றால் மட்டுமே பாடல்களை பயன்படுத்துகிறார்கள் இல்லையென்றால் அதுவும் கிடையாது. தமிழ் சினிமாவில் படங்கள் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது புதுமுகங்கள் நடிப்பில் கலக்கலாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ”அந்த 7 நாட்கள்”
இது கே.பாக்கியராஜின் பழைய படத்தின் டைட்டில் போல் இருக்கலாம். அதில் கே பாக்யராஜ் மலையாளி கேரக்டரில் நடித்திருப்பார். தாலி சென்டிமென்டை அடிப்படையாகக் கொண்டு அந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் 2025 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் அந்த ஏழு நாட்கள் திரைப்படம் அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
இதனுடைய கதைகளம் தமிழ் சினிமாவில் இதுவரை எவரும் பார்த்திராத ரொமான்டிக் திரில்லர் கதைகளத்தில் அமைந்திருக்கும். இந்த படத்தில் புதுமுக நடிகர்களாக அஜிதேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை எம்.சுந்தர் எழுதி இயக்கி இருக்கிறார். மேலும் இந்த படத்தை முரளி கபீர் தாஸ் என்பவர் தயாரித்துள்ளாரர். சச்சின் சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இவரை இசையில் வெளிவந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் முரளி கபீர் தாஸ் கூறுகையில்,” சினிமாவில் நான் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை எடுக்க முயன்றேன். அப்பொழுது எம். சுந்தர் இந்த கதையை எனக்கு சொன்னார். இந்த ரொமான்டிக் மற்றும் திரில்லர் அனுபவம் கொண்ட இந்த கதையை கேட்டவுடன் இதற்கு அந்த ஏழு நாட்கள் என்று டைட்டில் வைக்க முடிவெடுத்து விட்டேன்”.
”இதனால் பாக்கியராஜ் சாரிடம் சென்று அனுமதி கேட்டேன். அவரும் பயன்படுத்த சம்மதம் தெரிவித்துவிட்டார். அது மட்டும் இல்லாமல் அவரை இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளேன்” என்றும் கூறியுள்ளார். சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்து காதல் மற்றும் திரில்லர் படங்களில் அந்த ஏழு நாட்கள் தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடிக்கும். மேலும் இந்த படத்தில் நவீன எடிட்டிங் மற்றும் vfx மூலம் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர்.
அதிரடி திருப்பங்களைக் கொண்ட இந்த கதை ரசிகர்களை கடைசிவரை கவர்ந்து இழுக்கும். திறமையான நட்சத்திரம் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களும் இதில் பணியாற்றியுள்ளதால் கண்டிப்பாக ரசிகர்கலுக்கு இந்த படம் புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று பட குழு நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். 2025 ஆம் ஆண்டு சிறந்த தமிழ் ரொமான்டிக் படத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் ”அந்த ஏழு நாட்கள்” தான்
உங்களுக்கு சரியான படம்.
கவர்ச்சிகரமான கதை, இனிய பாடல்கள், திறமையான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எல்லாம் சேர்ந்து இந்த படம் ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை கொடுக்கும். இந்த படம் வருகிற செப்டம்பர் 12 திரையரங்கில் வெளியாக உள்ளது. மறக்க முடியாத ரொமாண்டிக் திரில்லர் அனுபவத்திற்கு மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அந்த ஏழு நாட்கள்.