ஆன்மீகம் அறிவோம் : இன்று உங்களுக்கு சந்திராஷ்டமமா? பால் குடிக்க மறக்காதீங்க..!
Top Tamil News September 02, 2025 01:48 PM

நாம் தினமும் நாள் காட்டியைப் பார்க்கும் போது ராசி பலன், சந்திராஷ்டமம் என்பதைப் பார்த்திருப்போம். அது என்ன சந்திராஷ்டமம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திர பெயர் போட்டுள்ளதே என நினைத்திருப்போம்.

அஷ்டம் என்றால் எட்டு. சந்திரன் உங்கள் ராசியிலிருந்து 8வது ராசியில் சஞ்சரிப்பதற்கு சந்திராஷ்டமம் என்று பெயர்.

அப்படி உங்கள் ராசிக்கு 8வது இடத்தில் சந்திரன் அமைந்திருந்தால், அது உங்களுக்கான சந்திராஷ்டம காலமாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக 27 நட்சத்திரங்கள் என்பதால், 25 நாட்களுக்கு ஒருமுறை இந்த சந்திராஷ்ட நிகழ்வு உங்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்படும்.

சந்திராஷ்டத்திற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்?

சந்திரன் மனோகாரகன் என்பார்கள். அதாவது நம்முடைய மன நிலையை நிர்வகிப்பவர். அவர் சந்திராஷ்டமமான 8வது இடத்தில் அசுப பலன்களை உண்டாக்கக் கூடியவர் என்பதால் அந்த 2 1/4 நாட்கள் உங்களுக்கு சற்று மன இறுக்கம் ஏற்படும் அவ்வளவு தான். ஆனால் இதற்காக ஏன் அந்தளவுக்கு கவலைப் பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது...

மனதை கட்டுப்படுத்த தெரிந்தவர்களுக்கும், எதையும் தாங்கும் பலமான இதயம் கொண்டவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு சற்று பிரச்னை தான். அவர்கள் அவர்களை சுற்றி நடக்கும் மன குழப்பத்தை உருவாக்கும் நிகழ்வுகளிலிருந்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

இந்த நாட்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் காலண்டரில் தனியாக குறிப்பிடுகின்றனர். சந்திராஷ்டம நேரத்தில் நம் மனது பதற்றமாக இருப்பதால் செயல்கள் வெற்றி அடைவதில் சிக்கல் ஏற்படும். இதை உணர்ந்து நாம் அந்த நாளில் திட்டமிட்டு செயல்படுதல் நல்லது.

சுப நிகழ்ச்சிகள் இல்லை:

மனித உடலில் மிக முக்கியமாக இருப்பது ரத்தம். சந்திரன் அவரைப் போன்றவர். இந்த நாளில் ரத்தம் சூடேறும், பதற்றம் அதிகரிக்கும் என்பாதால், ரத்த கொதிப்பு, ரத்தம் சார்ந்த உடல் பிரச்னை உள்லவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இது போன்ற காரணங்களால் தான் இந்த நாளில் நாம் ஒருவருடைய சுப நிகழ்ச்சி வைக்கும் போது அந்த நபருக்கு சந்திராஷ்டமம் இருக்கின்றதா என்பதைப் பார்த்து சுப நிகழ்ச்சிகளை வைக்கின்றனர்.

அறுவைசிகிச்சை:

திருமணம், கிரகப்பிரவேசம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுக்கும் ஜோதிடர்கள் இந்த தினத்தை தவிர்த்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சுப நிகழ்வை நடந்துபவர் மட்டுமல்லாமல் அவரின் பெற்றோருக்கும் சந்திராஷ்டமம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

மருத்துவ அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் முன் சந்திராஷ்டமம் உள்ளதா என்பதை பார்த்து அப்படி இருந்தால், அந்த நாளை தவிர்த்து விடுவார்கள். அந்த நாளில் பதற்றம் அதிகரிக்கும் என்பதால் சிகிச்சை தோல்வியில் முடியலாம் எனப்தற்காக இப்படி செய்கின்றனர்.

பரிகாரம்:


அதற்காக சந்திராஷ்டம நாளில் எந்த வேலையும் செய்யாமல், வெளியில் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டுமா என கேப்டது புரிகிறது...மிக முக்கிய அறுவை சிகிச்சை என்றால் தள்ளிப் போட முடியாது. அதற்குரிய பரிகாரம் உண்டு என்பதை தெரிந்துகொள்ளுங்கள்..
சந்திரனுக்கு உரிய திரவமான பாலை குடித்துவிட்டு உங்களின் அன்றாட பணியை துவங்கலாம். குளிர்ச்சியான பாதாம் பால் குடித்து உங்களின் பதற்றத்தினை குறைத்துக் கொள்ளுங்கள்.

முதலிரவு:

முதலிரவில் மணமக்கள் பால் அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் வைத்தனர். பதற்றம் இல்லாமல் அவர்களின் வாழ்க்கையை துவங்க வேண்டும் என்பதற்காக தான் பால், பழங்கள், பூ ஆகியவைகளுடன் சிறப்பு எற்பாடு செய்து மணமக்களை அனுப்புகின்றனர்.

நாம் அன்றாட பணிகளை சாரியாக, திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பதற்கு தான் ஜோதிடர்கள் முன்கூட்டியே சந்திராஷ்டம தினத்தை குறித்து வைத்து கவனமாக இருக்க வலியுறுத்தியுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.