தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். ஒரு இயக்குனராக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் ஒரு தயாரிப்பாளராக இரண்டு படத்தோடு தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக திடீரென்று அறிவித்தார்.
வெற்றிமாறன் தயாரித்த மனுஷி மற்றும் பேட் கேர்ள் திரைப்படம் சென்சார் போடில் பல பிரச்சினைகளை சந்தித்தது மட்டுமில்லாமல் அது நீதிமன்றம் வரை சென்று வெற்றிமாறனுக்கு பல இடைஞ்சல்களை கொடுத்தது. இந்நிலையில் சினிமா விமர்சகர் ராஜ கம்பீரன் இது எல்லாம் வெற்றிமாறனை சினிமாவிலிருந்து அடித்து விரட்ட நினைக்கும் கும்பல் செய்ற வேலைதான் என்று பகிரங்கமாக தனது கருத்தை கூறியுள்ளார் மேலும் அதில்
” அடிப்படையில் பாலுமகேந்திராவின் அசிஸ்டன்ட்டாக வந்து அவரை மாதிரி எதார்த்த படங்களாக மட்டும் எடுக்காமல் அதில் ஆக்சன் கலந்து தன்னுடைய படைப்புகளை உருவாக்குகிறார். அவருடைய வளர்ச்சி ஆடுகளம் படத்திலிருந்து தான் தொடங்கியது. அதற்குப்பின் அவர் அரசியல் படமாக எடுக்க ஆரம்பித்து விட்டார். அதில் விசாரணை படத்தில் பேசி இருக்கும் அரசியல்,என்கவுண்டர் எனப்படும் போலி அரசியலை மக்களுக்கு வெளிச்சம் போட்டி காட்டினார்”.
”அதில் பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டினார். அதன் பிறகு வந்த அசுரன் விடுதலை-2 போன்ற படங்கள் தமிழ் தேசிய அரசியல், இடதுசாரி அரசியல் இது குறித்த படங்களை எல்லாம் அவர் எடுக்கிறார். அரசுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட படங்களுக்கு மத்தியில் மக்களின் பிரச்சனைகளை தன்னுடைய திரைப்படங்களின் மூலம் காட்டியவர் வெற்றிமாறன் என்பதால் அவருடைய அரசியல் படங்கள் முக்கியமானதாக பார்க்கப்பட்டது”.
”வெற்றிமாறன் ஒரு தலித் அல்லாத கலைஞர். ஆனால் அவரை ஒரு தலித் என்று அதன் சார்ந்த படங்களை எடுப்பதால் அவரை அந்த வட்டத்திற்குள் பூட்டி வைத்துவிட்டனர். உண்மையில் வெற்றிமாறன் சமூகம் வேறு அவருடைய குடும்பப் பின்புலம் வேறு. தற்போது இவருடைய அரசியல் எது என்பது எதிரிகளுக்கு புரிந்து விட்டது. அதனால் அவருக்கு தொடர்ந்து பிரச்சினைகளை கொடுத்து வருகிறார்கள்”.
”அவரை நேரடியாக வீழ்த்த முடியாது என்று மறைமுகமாக சென்சார் போர்டு மூலம் அழுத்தத்தை கொடுப்பது, அதன் பிறகு கோர்ட்டில் வாய்தா மேல் வாய்தா போட்டு அவரை அலைய வைத்து பல கோடிகளை போட்டு படம் எடுத்து இப்படி அலைய வைத்து மன அழுத்தம் கொடுத்தால் என்ன செய்வார்.
அது மட்டுமல்ல தமிழ் தேசிய அரசியல்வாதிகள் எதாவது பாதிப்புக்குள்ளாகும் போது அதற்கும் அவர் களத்தில் வந்து நிற்கிறார். இதனால்தான் இவருக்கு பல நெருக்கடிகள் வருகிறது. அதனால் தான் இவரை சுற்றி சுற்றி கிடைக்கும் கேப்புகளில் இவருக்கு தொந்தரவு கொடுத்து வருகிறார்கள்”.. என்று கூறியுள்ளார்