செப்டம்பர் 5ம் தேதி மிலாடி நபி தினத்தையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியிலும் நாளை மிலாடி நபி தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள், பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கலால் துறை ஆணையரின் ஆணைப்படி, புதுச்சேரி, காரைக்கால் மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து, மதுபான கடைகள் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும்.
மேலும் மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?