இன்று மிலாடி நபியை ஒட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பேக்கரி கடையில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் பேரில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதில் அங்கிருந்த மொத்தம் 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மதுபானங்களை விற்பனை செய்த சேனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அதிமுக கட்சியின் வர்த்தக அணி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?