எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு
Top Tamil News September 06, 2025 04:48 AM

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நிலக்கோட்டை பகுதிக்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்பு சார்பில் கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை 6ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் நாளை நிலக்கோட்டை தொகுதிக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து சமூக அமைப்பு சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வத்தலகுண்டு பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில்  முக்குலத்தோர் சமூகத்தை வஞ்சித்து விட்டு  என்ன வேலை  இங்கு வரவேண்டாம். என்ற வாசகங்கள் அடங்கிய  சுவரொட்டிகள் சமூக அமைப்பு சார்பில்  ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளால்  வத்தலகுண்டு பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.